செய்திகள்

பேலன்ஸ் தவறி விழ வேண்டாம் - தலைக்காயம் பயமில்லை: சாலையை கலக்கவரும் பி.எம்.டபிள்யூ மின்சார பைக்

Published On 2016-10-21 09:45 GMT   |   Update On 2016-10-21 09:45 GMT
மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
பெர்லின்:

மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஒற்றை பிரேமில் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளுக்கு ‘பி.எம்.டபிள்யூ மோட்டாராட் விஷன் நெக்ஸ்ட் 100’ ( BMW Motorrad VISION NEXT 100 bike) என பெயரிடப்பட்டுள்ளது.



இதில் உள்ள தடிமனான டயர்கள் வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கின்றன. மேலும், அசாதாரண சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் ’பேலன்ஸ்’ தவறி விழும் ஆபத்தும், அதனால் தலைக்காயம் ஏற்படும் பயமும் அறவே இல்லை.

இந்த பைக்குடன் அளிக்கப்படும் டிஜிட்டல் கண்ணாடி, சாலையின் அம்சங்களை ஓட்டுபவர்க்கு தெரிவித்து பலவகைகளில் துணைபுரிகிறது. மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் உள்ள இணைப்பை இந்த பைக்கை ஓட்டும் தருணத்தில் உணரலாம் என இதன் தயாரிப்பாளர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

அடுத்த (2017) ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய பைக்கின் பிரமோ வீடியோவைக் காண..,

Similar News