செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு அறிவிப்பு

Published On 2016-10-13 12:06 GMT   |   Update On 2016-10-13 12:06 GMT
2016-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க கவிதை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதற்காக 2016-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு(75) இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1941-ம் ஆண்டு பிறந்த பாப் டிலன் தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். அவருக்கு நாட்டுப்புற பாடகர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகங்கள் உண்டு. இதுதவிர மனித உரிமைகள் மற்றும் போர் எதிர்ப்பு பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.

2000-ம் ஆண்டில் சிறந்த பாடகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற பாப் டிலன் அமெரிக்காவின் உயரிய விருதுகளான கிராமி, குளோப் போன்ற விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News