செய்திகள்

என்னுடைய பயணம் இந்தியா-நேபாளம் உறவு கசப்புகள் மறந்து பலமாகும்: பிரதமர் பிரசண்டா

Published On 2016-09-11 15:13 GMT   |   Update On 2016-09-11 15:13 GMT
தன்னுடைய பயணம் இந்தியா-நேபாளம் இடையேயான உறவை கசப்புகள் மறந்து பலப்படுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
காத்மண்டு:

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நேபாள பிரதமர் பிரசந்தா வரும் செப்டம்பர் 15-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். 4 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையிலான ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், தன்னுடைய பயணம் இந்தியா-நேபாளம் இடையேயான உறவை பலப்படுத்தும் என்று பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பிரசண்டா பேசுகையில், “அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தின் போது இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட போவதில்லை.

மாதேசி போராட்டம் காரணமாக இருநாடுகளுக்கு இடையே கசப்பான அனுபவங்கள் தற்போது நிலவி வரும் நிலையில் என்னுடைய பயணம் இந்தியா-நேபாளம் உறவை பலப்படுத்தும்” என்று கூறினார்.

Similar News