தொடர்புக்கு: 8754422764

எங்களது ரெயிலை எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கவில்லை- இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டு ரெயிலினை இந்திய எல்லைக்குள் செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 15:29

அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்

அமெரிக்காவில் தஞ்சம் அடைய தாயுடன் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி மெக்சிகோ எல்லையில் கொளுத்தும் வெயிலில் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 14:02

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 2019 07:58

லிபியா உள்நாட்டு போர் - இருதரப்பு மோதலில் 42 பேர் பலி

லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 15, 2019 07:51

போலி வங்கி கணக்கு மோசடியில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது

வங்கிகளில் போலியான பெயர்களில் கணக்கு தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 14, 2019 21:50

மாணவ-மாணவியருக்கு இலவச உணவு - அட்சயா பாத்ரா நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது

இந்தியாவில் தினந்தோறும் சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வரும் அட்சயா பாத்ரா தொண்டு நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

பதிவு: ஜூன் 14, 2019 18:55

ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு திடீர் ரத்து

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இன்று பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்தானது.

பதிவு: ஜூன் 14, 2019 18:40

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அனைவரும் நின்றிருந்த போது அவையடக்கமின்றி அமர்ந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உள்நாட்டில் கண்டனம் பெருகிவருகிறது.

பதிவு: ஜூன் 14, 2019 17:54

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் வழக்கு - அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமெரிக்க அரசின் ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 14, 2019 17:36

ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுப்பு

ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றிலிருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 14, 2019 16:21

பத்திரிகையாளர் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு காவல் அதிகாரிகள் நீக்கம்: அதிபர் புதின் அதிரடி

போதை மருந்து கடத்தியதாக புலனாய்வு பத்திரிகையாளரை ஆதாரமின்றி கைது செய்த இரு காவல்துறை அதிகாரிகளை அதிபர் புதின் உடனடியாக நீக்கியுள்ளார்.

பதிவு: ஜூன் 14, 2019 15:57

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினையையும் மோடி தீர்த்து வைப்பார்: இம்ரான்கான்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினையையும் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்து வைப்பார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 14, 2019 16:40
பதிவு: ஜூன் 14, 2019 15:22

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது

இலங்கையில் 258 உயிர்களை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட 5 பேர் ஐக்கிய துபாயில் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 14, 2019 14:43

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை தேவாலயத்தில் கண்டேன் - பிரதமர் மோடி வேதனை

ஈஸ்டர் தினத்தன்று கொழும்புவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது காண முடிந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அப்டேட்: ஜூன் 14, 2019 15:38
பதிவு: ஜூன் 14, 2019 14:07

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது- அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி

ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 14, 2019 12:01

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர்.

அப்டேட்: ஜூன் 14, 2019 12:33
பதிவு: ஜூன் 14, 2019 11:22

எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் எதிரொலி - பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 14, 2019 10:38

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

கிர்கிஸ்தான் நாட்டில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பதிவு: ஜூன் 14, 2019 08:03

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு - மைக் பாம்பியோ

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 14, 2019 07:55

சிலியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

பதிவு: ஜூன் 14, 2019 07:17

நட்பு மரம் பட்டுப்போனது - அமெரிக்காவுக்கு மற்றொரு மரக்கன்றை அனுப்புவேன் - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேட்டி

முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறை பகுதியில் இருந்து மற்றொரு ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 14, 2019 06:30