செய்திகள்

ரீசார்ஜ் செய்வோருக்கு அதிரடி கேஷ்பேக் வழங்கும் வோடபோன்

Published On 2018-11-19 06:20 GMT   |   Update On 2018-11-19 06:20 GMT
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் அதிரடி கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Vodafone
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கேஷ்பேக் சலுகை ஒவ்வொரு வட்டாரங்களிலும் வேறுபடுகிறது.

100 சதவிகித கேஷ்பேக் சலுகையை மை வோடபோன் செயலியில் இருந்து பெற முடியும். கேஷ்பேக் சலுகை ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களாக வழங்கப்படுகிறது. 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 விலையில் கிடைக்கும் மூன்று அன்லிமிட்டெட் பிரீபெயிட் சலுகைகளில் கிடைக்கிறது.

மூன்று பிரீபெயிட் சலுகைகளிலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங், எஸ்.எம்.எஸ். தினமும் 1.4 ஜி.பி. அதிவேக 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.399 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டி, ரூ.458 சலுகையில் 84 நாட்களும், ரூ.509 சலுகையில் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் பயனர்களுக்கு 100 சதவிகித கேஷ்பேக் சலுகை தேர்வு செய்யப்பட்ட சலுகைகளுக்கு வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ போன்றே வோடபோன் வழங்கும் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களை பயன்படுத்தி அடுத்தடுத்த ரீசார்ஜ்களை செய்யும் போது ரூ.50 தள்ளுபடி பெற முடியும்.



உதாரணத்திற்கு ரூ.399 சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள எட்டு கூப்பன்கள் வழங்கப்படும், இவற்றை மை வோடபோன் செயலி மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் அடுத்தமுறை ரீசாஜ் செய்யும் போது இந்த கூப்பன்களை கொண்டு ரூ.349 மட்டுமே செலுத்தினால் போதுமானது.

முதல்முறை ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு மட்டுமே வவுச்சர்களை பயன்படுத்த முடியும். அந்த வகையில் முதலில் ரீசார்ஜ் செய்யும் மொபைல் நம்பருக்கு வழங்கப்படும் வவுச்சர்களை கொண்டு மற்றொருவர் மொபைல் நம்பருக்கு பயன்படுத்த முடியும்.

சென்னை வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கு ரூ.509 ரீசார்ஜ் சலுகை வழங்கப்படவில்லை. பீகார் மற்றும் ஜார்கண்ட் வட்டார பயனர்களுக்கு ரூ.409 சலுகையும், இமாச்சல் பிரதேச பயனர்களுக்கு ரூ.399 மற்றும் ரூ.509 சலுகைகள் வழங்கப்படவில்லை.

இதேபோன்று ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட வட்டாரங்களில் 4ஜி சேவைகள் வழங்கப்படவில்லை என்பதால், சலுகைகளில் மாற்றம் இருக்கும். ரூ.399 சலுகை ரூ.409 விலையிலும் ரூ.458 சலுகை ரூ.459-க்கும், ரூ.509 சலுகை ரூ.529 விலையில் வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் சலுகைகளின் விலை மாறினாலும், சலுகைகளில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. #Vodafone
Tags:    

Similar News