தமிழ்நாடு

அழகு நிலைய பெண்ணை கடத்தி சென்று அடைத்து வைத்து சித்ரவதை- சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Published On 2022-10-02 05:30 GMT   |   Update On 2022-10-02 05:30 GMT
  • என்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள்.
  • நான் உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்ரவதை செய்கிறான்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. கணவர் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பிரவினாவின் தாய் சிலோ மீனா என்பவர் பல்லடம் போலீசில் தனது மகளை இரண்டு நாட்களாக காணவில்லை அவளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிரவீனாவை தேடி வந்தனர்.

போலீசார் பிரவீனாவை தேடி வரும் நிலையில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது, அதில் பிரவீனா பேசியிருப்பதாவது:-

வாடிக்கையாளராக வந்து செல்லும் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வி என்பவரது கணவர் சிவகுமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று என்னிடம் வீட்டை வங்கி கடன் வைத்து ரூ.75000 வரை பெற்று கொண்டார். மேலும் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வரை பெற்றுக்கொண்டார்.

தனது வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும், மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்.

என்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். நான் உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்ரவதை செய்கிறான். தினம் தினம் என்னை கெஞ்ச வைக்கிறான். அவனிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்.

மேலும் தான் வேறு எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டதாகவும் தன்னை காப்பாற்றும் படி அப்பெண் கண்ணீர்மல்க பேசியிருந்தார். வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வீடியோவை கைப்பற்றிய பல்லடம் போலீசார் பிரவீனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி பகுதியில் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக திருச்சி போலீசாரின் உதவியும் நாடியுள்ளனர்.

Tags:    

Similar News