தமிழ்நாடு

மக்களிடம் கருத்து கேட்காமலேயே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்- ராகம் சவுந்தரபாண்டியன் அறிக்கை

Update: 2022-08-08 08:43 GMT
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

சென்னை:

இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய மக்களை பாதிக்கும் ஒரு கொடுமையான விளையாட்டு. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏகப்பட்ட இளைஞர்களும் ஆண்களும் பாதிக்கப்பட்டு தன் உயிரையும், உடைமைகளையும் இழந்து இன்றைக்கு அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசு இது சம்பந்தமாக யாரிடமும் கருத்து கேட்காமலேயே இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News