தமிழ்நாடு
வார தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
- தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.50-க்கும் பார் வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,720-க்கும் சவரன் ரூ. 53,760-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.50-க்கும் பார் வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.