தமிழ்நாடு

அரக்கோணம் மின்சார ரெயிலில் பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Published On 2023-02-04 06:15 GMT   |   Update On 2023-02-04 06:15 GMT
  • சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
  • சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் அரக்கோணம் மின்சார ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் மின்சார ரெயில்களில் 9 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

எனவே சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் அரக்கோணம் மின்சார ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 2 ரெயில்களில் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்படும்.

மேலும் அடுத்த நிதியாண்டில் 12 ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 35 சதவீதம் பயணிகள் அமர்ந்து செல்ல முடியும்.

நெரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறி பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் ரெயில் பெட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழித்தடத்தில் தினமும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News