தமிழ்நாடு

திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Update: 2022-09-27 05:01 GMT
  • திரிபுராவை சேர்ந்த இவர்களிடமிருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
  • செம்பியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத், மதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

திரிபுரா மாநிலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களது பெயர் சபியுல்லா, இஸ்மாயில் என்பது தெரிய வந்தது.

இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 18 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுகந்தா தாஸ், பிரசென்ஜித் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுராவை சேர்ந்த இவர்களிடமிருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத், மதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிட மிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News