தமிழ்நாடு

அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்ட காட்சி

மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம்

Published On 2022-06-28 03:04 GMT   |   Update On 2022-06-28 03:04 GMT
  • பக்தர்கள் 16 வகையாக சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்
  • நோயில் இருந்து காக்கவும், மழை வேண்டியும் அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை ஏ.வி.ஆர். நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மழை இல்லாமலும், நோய் நொடியாலும் மக்கள் பாதிக்கப்படும்போது அரசமரத்தை சிவபெருமான் வடிவிலும், வேப்பமரத்தை பார்வதி தேவி வடிவிலும் நினைத்து திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நோய் நொடி இல்லாமல் மக்கள் நலமாக வாழ்வார்கள் என்பதும் ஐதீகம்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்களை அந்த நோயில் இருந்து காக்கவும், மழை வேண்டியும் அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக பக்தர்கள் 16 வகையாக சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்பட்டது.

Similar News