தமிழ்நாடு

4 இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு- விழுப்புரம் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் சரண்

Published On 2022-11-14 08:13 GMT   |   Update On 2022-11-14 08:13 GMT
  • இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 4 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டுகள் தனசேகரன், கார்த்திக்கேயன், பக்தவச்சலம் ஆகியோர் மீது புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனை தவிர மற்ற 4 பேரும் சென்னை ஐகோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்றனர்.

ஆனால் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அப்போது அவர் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவினை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்ததால் அங்கு சரண் அடைந்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

Tags:    

Similar News