தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

Published On 2023-01-09 06:05 GMT   |   Update On 2023-01-09 06:05 GMT
  • நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
  • பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2-ந் தேதி 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று மேலும் 10 காசு அதிகரித்துள்ளது முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலை ஆகும்.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு:-

சென்னை-575 காசு, ஹைதராபாத்-549, விஜயவாடா-546, பர்வாலா-557, மும்பை-606, மைசூரு-567, பெங்களூரு-565, கொல்கத்தா-615, டெல்லி-575 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி ஒரு கிலோ ரூ.82-க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 எனவும் எவ்வித மாற்றம் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News