தமிழ்நாடு
மேடையில் கரகத்தை சுமந்தபடி உள்ள தென்காசி கலெக்டர் ஆகாஷ்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் தலையில் கரகம் வைத்து கலைஞர்களை உற்சாகப்படுத்திய கலெக்டர்

Published On 2022-08-09 09:22 GMT   |   Update On 2022-08-09 09:22 GMT
  • குற்றாலம் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • கலெக்டரை பாராட்டும் விதமாக உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் ஆரவார விசில் சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது.

தென்காசி:

குற்றாலம் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலையில் குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியின்போது அதனை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கரகாட்டக் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அந்த கலைஞர்களின் வேண்டுகோளை ஏற்று தலையில் கரகம் வைத்து உற்சாகப்படுத்தினார். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அரங்கில் அதிகமாக இருந்தது.

கலெக்டரை பாராட்டும் விதமாக உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் ஆரவார விசில் சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது. தற்பொழுது தென்காசி கலெக்டர் ஆகாஷின் இந்த செயலை கலைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News