தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Published On 2023-12-04 03:53 GMT   |   Update On 2023-12-04 06:43 GMT
  • மிச்சாங் புயல் சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
  • கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது.

வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- வடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன்பின் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News