தமிழ்நாடு

இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும்: பாபநாசத்தில் இரவில் பூத்த பிரம்ம கமலம் அதிசய மலர்

Published On 2023-08-03 04:23 GMT   |   Update On 2023-08-03 05:37 GMT
  • பூ பூக்கும் போது மிகுந்த நறுமணம் வீசியது.
  • அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை செட்டித்தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 60). வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் பல்வேறு மூலிகை செடிகள், காய்கறி செடிகள் வளர்த்து வருகிறார்.

கார்த்திகேயன் ஒசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது அங்கு வளர்ந்து வந்த பிரம்ம கமலம் செடியை அவர்களிடம் வாங்கி வந்து தனது வீட்டில் பராமரித்து வளர்த்து வந்தார். இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், அதுவும் நள்ளிரவில் மட்டுமே பூ பூக்கும் தன்மை கொண்டது.

இந்நிலையில் செடி நடப்பட்டு 5-ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம், இரவு 9 மணிக்கு பிறகு மலர தொடங்கிய பிரம்ம கமலம் பூ, 12 மணிக்கு முழுவதுமாக மலர்ந்தது. அதன் பிறகு 1 மணிக்கு மேல் மூடத்தொடங்கியது.

பிரம்மகமலம் செடியில் பூக்கும் பூவானது. விடிவதற்குள் வாடி விடும் தன்மை கொண்டது. இந்த பூ பூக்கும் போது மிகுந்த நறுமணம் வீசியது. இதை, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். 

Tags:    

Similar News