தமிழ்நாடு
சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டிஐஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு

தேர் திருவிழாவில் விபத்து- புலன் விசாரணை தொடங்கியது: ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2022-04-27 05:42 GMT   |   Update On 2022-04-27 05:42 GMT
தேர் திருவிழா விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெற்றது. அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News