தமிழ்நாடு
கேமரா

சென்னை மாநகராட்சியில் பதற்றமான 1,089 வாக்கு சாவடிகளில் வெப் கேமரா

Published On 2022-01-30 07:18 GMT   |   Update On 2022-01-30 07:18 GMT
தேர்தலில் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் வெப் கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 61 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 1,089 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது சென்னை மாநகராட்சியில் உள்ள 850 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது.

இதனால் சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் வெப் கேமிராக்களை பொருத்துகிறது. பதற்றமான 1089 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக 15 மண்டலத்திலும் போலீஸ் அதிகாரிகளுடன் இந்த வாரம் கலந்து ஆலோசனை செய்து இதுகுறித்து முடிவு செய்யப்படும். தேர்தலில் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் வெப் கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

Tags:    

Similar News