செய்திகள்
உயர்நீதிமன்றம் மதுரை கிளை

கட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: கோர்ட் அதிருப்தி

Published On 2020-12-03 13:57 GMT   |   Update On 2020-12-03 13:57 GMT
மாவட்டங்களை பிரிக்கும்போது மாவட்டங்களுக்கு இடையே ஒற்றுமை இருப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்டது. புதிதாக உருவான தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம் போன்றவைகள் கட்ட வேண்டியுள்ளது. ஒரு இடத்தில் அரசு மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அருகே மற்றொரு அரச கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மருத்துவமனை அருகே அரசு அலுவலகம் இருந்தால், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் என ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘கட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. தற்போதுள்ள அரசுகளும், முந்தைய அரசுகளும் இதை செய்துள்ளன. மாவட்டங்களை பிரிக்கும்போது மாவட்டங்களுக்கு இடையே ஒற்றுமை அவசியம். நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்டங்களை பிரிப்பது நல்லது.

ஐந்து எம்.எல்.ஏ., ஒரு எம்.பி. ஒரு ஆட்சியர், எஸ்.பி., நீதிமன்றம் இருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
Tags:    

Similar News