செய்திகள்
பழனி முருகன் கோவில்

பொது ஏலம் ரத்து எதிரொலி: பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய்

Published On 2020-10-01 04:55 GMT   |   Update On 2020-10-01 04:55 GMT
பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:

பழனி முருகன் கோவிலில் பணிபுரிய காவலாளி, தூய்மை பணியாளர்களை நியமிப்பது, பஞ்சாமிர்தம் தயாரிப்பது தொடர்பாக ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து பொது ஏலம் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பொருட்களுக்கான ஏலம் தனித்தனியாக விடப்பட்டது.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிற மூலப்பொருட்களான பூவன், கற்பூரவல்லி மற்றும் மலை வாழைப்பழத்துக்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டு பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, பஞ்சாமிர்தம் தயாரிக்க சுமார் 2 ஆயிரம் டன் வாழைப்பழம் வாங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ கற்பூரவல்லி பழம் ரூ.35.45-க்கு ஏலம் போனது. ஆனால் தற்போது ரூ.21.50-க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு ரூ.37-க்கு ஏலம்போன குடகுப்பழம் இந்த ஆண்டு ரூ.35-க்கும், ரூ.83.65-க்கு ஏலம்போன மலைவாழைப்பழம் தற்போது ரூ.80-க்கும் ஏலம் போனது என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News