செய்திகள்
குடோனுக்கு சீல்

திருவொற்றியூரில் உரிமம் இல்லாமல் இயங்கிய குடோனுக்கு சீல்

Published On 2020-08-08 22:00 GMT   |   Update On 2020-08-08 22:00 GMT
குடோன் நீண்டநாட்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரப்பும் வகையில் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருவொற்றியூர்:

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட கலைஞர் நகர் 4-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற திருவொற்றியூர் மண்டல வரி மதிப்பீட்டாளர் பிரபு, உரிமம் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனில் ஆய்வு செய்தனர்.

அதில் அந்த குடோன் நீண்டநாட்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரப்பும் வகையில் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Tags:    

Similar News