செய்திகள்
செல்வ மகள் சேமிப்பு திட்டம்

அஞ்சல் துறையில் 10 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்

Published On 2020-06-03 08:58 GMT   |   Update On 2020-06-03 08:58 GMT
கரூர் மாவட்டம் உள்பட திருச்சி மத்திய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களில் அஞ்சல் துறையில் 10 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கரூர்:

இந்திய அஞ்சல் துறை சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொது சேமநல நிதி, சேமிப்பு கணக்கு, ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரியின் சமூக பாதுகாப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கரூர் மத்திய மண்டல அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திய அஞ்சலக துறை மூலம் 2019-20 நிதியாண்டில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.8,702 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் பெறப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டம் உள்பட திருச்சி மத்திய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களில் 10 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மட்டும் 70 ஆயிரத்து 582 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.125 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 380 டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஏ.டி.எம். வசதி இல்லாத கிராமங்களில் வீடு தேடி சென்று பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும், ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளும் அஞ்சலகங்களில் செய்து கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News