செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

அம்பன் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-05-20 07:46 GMT   |   Update On 2020-05-20 07:46 GMT
அம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை:

வங்கக்கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 22 கிமீ வேகத்தில் நகரும் புயல் இன்று மாலை மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க உள்ளது. 

இந்நிலையில் அம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

அம்பன் புயல் நெருங்கி வருவதால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அடித்தளமில்லாத சாதாரண வீடுகள், குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 4.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News