செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் - கடம்பூர் ராஜூ

Published On 2019-09-30 16:30 GMT   |   Update On 2019-09-30 16:30 GMT
ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் டிக்கெட் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை செயலாளர், வணிக வரி செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதனை விரைவில் அமல்படுத்தப்படும் அரசுத்துறை மற்றும் இன்றி சினிமா துறையினரும் இணைந்து வரும்போது விரைவில் சாத்தியமாகும் இது பலதரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் சந்திரசேகர் கூட அரசு சினிமா துறையை காப்பாற்ற நல்ல முயற்சி எடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். ஆன்லைன் டிக்கெட் முறை வரும்போது சினிமாத்துறை லாபகரமான தொழிலாக மாறி வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் முறையாக வங்கிகளில் கடன் பெற முடியும் என்று சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாரும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் நடை முறைப்படுத்தப்படும் அடுத்த கட்ட கூட்டத்தில் இறுதி வடிவம் பெறும், தீபாவளிக்குள் அமல்படுத்த முடியாவிட்டாலும் விரைவில் அமல்படுத்தப்படும். ஆன்லைனில் புதிய படங்கள் வருவதை தடுக்க உள்துறை மூலமாக கண்காணிக்க ஏற்கனவே கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழ் திரைப்படங்கள் உலகளவில் வெளியிடப்படுகிறது. அங்கிருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதனை எந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சாத்தியமாகும்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ. 50.80 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பீனிக்ஸ் பறவை இயற்கை வடிவில் உள்ள அமைப்புகள் சர்வதேச டெண்டர் விடப்பட்டு அதிகாரிகள் துபாய்க்கு சென்று பார்வையிட்டு அவை கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Tags:    

Similar News