செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-06-04 04:30 GMT   |   Update On 2019-06-04 04:30 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 166 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 178 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நேற்று 166 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 178 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 46.26 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 46.12 அடியானது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News