செய்திகள்

ஆரணி அருகே அதிமுக பொது கூட்டத்தில் பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு

Published On 2018-12-01 10:32 GMT   |   Update On 2018-12-01 10:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற அ.தி.மு.க. 47-வது ஆண்டுபொதுகூட்டத்தில் பக்திபாடலுக்கு பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. #admk #spiritualdance

ஆரணி:

ஆரணிஅடுத்த பையூர் கிராமத்தில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு பொது கூட்டம் நடைபெற்றது. ஓன்றியசெயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார்.

மேலும் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் அரசின் திட்டங்கள் பற்றிபேசும் போது இசையுடன் திடீரென மேல்மலையனுர் அங்காளம்மன் பாடலை பாடினார்.

அப்போது பொதுக் கூட்டத்தில் அதிகளவில் இருந்த பெண்கள் கூட்டத்தில் ஓரு சில பெண்கள் சாமி ஆடி பரவசம் அடைந்தனர்.

இதனால் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் பக்தி கூட்டமாக மாறியது. அமைச்சர் சேவூர் ராமசந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பெண்கள் பக்தி பாடலுக்கு சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தூசிமோகன் நகரபேரவைசெயலாளார் பாலாஜிபாபு, வழக்கறிஞர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #admk #spiritualdance

Tags:    

Similar News