செய்திகள்

போலி ஆப்பிள்களை தடை செய்ய வேண்டும் - வணிகர்கள் மகாஜன சங்கம்

Published On 2018-04-15 11:48 GMT   |   Update On 2018-04-15 11:48 GMT
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் போலி ஆப்பிள்களை தடை செய்ய வேண்டும் என்று வணிகர்கள் மகாஜன சங்கம் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை:

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் தொடக்க விழா, தமிழ் புத்தாண்டு விழா மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி தலைவர் மயிலை எம்.மாரிதங்கம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஒவ்வொரு வணிகரையும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக்க மகாஜன சங்கம் பாடுபடும்.

* ஆட்சியில் வணிகரின் பிரதிநிதித்துவத்தை பெற அனைத்து முயற்சியிலும் ஈடுபடும்.

* நாட்டின் வளர்ச்சிக்காக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை வரவேற்கிறோம். அதே சமயத்தில் எளிய வகையில் வரி செலுத்தும் முறைகளுடன், அனைத்து பொருட்களுக்கும் ஒரே சமமான ஜி.எஸ்.டி. வரியை அதிகபட்சம் 4 சதவீதமாக அமல்படுத்த சங்கம் போராடும்.

* தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனைக்கு கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதனை மக்களுக்கு வினியோகம் செய்யும் கடைநிலை அப்பாவி வணிகர்கள் தண்டனைக்கு அப்பாற்பட்டவராக உணவு உற்பத்தி தரக்கட்டுப்பாடு அதிகாரிகளும், அரசும் நினைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

வெளிநாட்டு ஆப்பிள்கள் எல்லாம் வெளியே ஆப்பிள் உள்ளே பேரிக்காய் என மக்களை ஏமாற்றும் விதமாக உள்ளதை உடனடியாக தடை செய்ய அரசை கோருகிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஹாஜி மம்முசா, சிங்காரம், குணசீலன், பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், கண்மணி, கணேசன், ஞானசேகர், ஜான் கிறிஸ்டோபர், பொய்யாமொழி, தங்கதுரை, ரவீந்திரன், யேசுவடியான், ஆறுமுகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலை கே.அசோக்குமார் வரவேற்றார். புதிய நிர்வாகி களை நிறுவனத்தலைவர் சந்திரன் ஜெயபால் அறி முகம் செய்து வைத்தார். மாரீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News