செய்திகள்

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2017-11-24 14:22 GMT   |   Update On 2017-11-24 14:23 GMT
டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
நன்னிலம்:

டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணை எடுத்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்துள்ள கச்சா எண்ணை குழாய்களில் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதால் ஓ.என்ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சலிப்பேரி ஊராட்சிக்கு உட்பட் தென்னஞசார் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் எதிர்ப்பை மீறி 1000 அடி ஆழ்த்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதை மேலும் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

மக்கள் நலம் காக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் மக்கள் வாழ் வாதாரங்களை பாதிக்கும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நன்னிலம் வர்ததகர்கள் சங்கம் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நன்னிலம் சன்னா நல்லூர், ஆண்டிப்பந்தல், பனங்குடி, தூத்துக்குடி, சிகார் பாளையம், தேங்கனூர் ஆகிய இடங்களில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
Tags:    

Similar News