செய்திகள்

கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2017-11-16 08:40 GMT   |   Update On 2017-11-16 08:40 GMT
மதுரையில் கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி உள்ளிட்ட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில்  கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.



கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது இன்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  5191 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.
Tags:    

Similar News