செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் எஸ்டேட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2017-04-25 07:27 GMT   |   Update On 2017-04-25 07:27 GMT
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பங்களை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் எஸ்டேட்டை சுற்றிலும் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் தேயிலை தோட்டங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். பலத்த பாதுகாப்புடன் இருந்த கொடநாடு எஸ்டேட்டில் முகமூடி கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து காவலாளியை கொன்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை எஸ்டேட்டுகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு எஸ்டேட்டுக்குள் நுழையும் பகுதியில் கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கொலை - கொள்ளை நடந்த கொடநாடு எஸ்டேட்டில் நேற்று இரவு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் எஸ்டேட்டை சுற்றிலும் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

Similar News