செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு

Published On 2017-04-24 07:37 GMT   |   Update On 2017-04-24 07:37 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,528-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை ரூ.176 குறைந்து பவுன் ரூ.22,528-க்கு விற்கிறது.

கடந்த 15-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 736 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 21-ந்தேதி பவுன் ரூ.22 ஆயி ரத்து 608-க்கு விற்றது.

நேற்று முன்தினம் ரூ.104 உயர்ந்தது. பவுன் ரூ.22 ஆயிரத்து 704 ஆக இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதே விலைதான் நீடித்தது.

இன்று பவுனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.22 குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,816-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 500 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.40 காசு குறைந்து ரூ. 44.50-க்கு விற்கப்படுகிறது.

Similar News