செய்திகள்

ஜெயலலிதா மறைவு: அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

Published On 2016-12-05 20:22 GMT   |   Update On 2016-12-05 20:22 GMT
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு(திங்கள் கிழமை) 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பிற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,

ஜெயலலிதா காலமானதையடுத்து தமிழ்நாட்டில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயலலிதா மறைவையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கொடிக்கம்பங்களில் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

அரசு துக்கம் 7 நாட்கள் அனுசரிக்கப்படுவதால் இந்த நாட்களில் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது.

Similar News