செய்திகள்

விழுப்புரம்-கடலூர் மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை

Published On 2016-12-02 06:43 GMT   |   Update On 2016-12-02 06:46 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் ராட்சத அலை எழுந்ததால் 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.
மரக்காணம்:

வங்கக்கடலில் உருவான ‘நடா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. புயல் இன்று கரையை கடந்த நிலையிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் ராட்சத அலை எழுந்ததால் 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றம் காரணமாக கடற்கரை அருகே உள்ள ராஜூ, சேகர், அருள் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. அரிகிருஷ்ணன் என்பவரின் விசைப்படகு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டது.

கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர்.

‘நடா’ புயல் காரணமாக கடலூர், தேவனாம்பட் டினம் மற்றும் கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் 5 அடி உயரத்துக்கு எழுந்தன. இதனால் ஆழ்கடலில் தங்கி யிருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உட னடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் 49 கடலோர கிராமங்களில் தண்டோரா மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பினர். 2 ஆயிரம் பைபர் படகுகள்,700 விசைப்படகுகள், 200 கட்டு மரங்கள் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. 3-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Similar News