செய்திகள்

மது குடிக்கும் தகராறில் நண்பரை கொன்றேன்: தொழிலாளி வாக்குமூலம்

Published On 2016-10-27 06:44 GMT   |   Update On 2016-10-27 06:45 GMT
மது குடிக்கும் தகராறில் நண்பரை கொன்றதாக கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராயபுரம்:

சென்னை, கொத்தவால் சாவடி நாட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 37). சுமை தூக்கும் தொழிலாளி.

நேற்று மாலை அதே பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் தலையில் கல்லைப்போட்டு கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து கொத்தவால் சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ராபர்ட், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரான கிருஷ்ணமூர்த்தியை கொன்றது தெரிந்தது.

இதையடுத்து ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நானும், கிருஷ்ணமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அப்போது எனக்கு மதுவை குறைத்து ஊற்றுவார். இதனை நான் தட்டிக்கேட்ட போது அடிக்கடி அடித்து வந்தார்.

சம்பவத்தன்று மாலையில் தங்கசாலையில் உள்ள மதுக்கடையில் 2 பேரும் மது அருந்தினோம். அப்போதும் எனக்கு மதுவை குறைத்து ஊற்றினார். இதனை கண்டித்த போது என்னை தாக்கினார்.

பின்னர் மது போதையில் கிருஷ்ணமூர்த்தி நாட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பிளாட் பாரத்தில் தூங்கி விட்டார். அங்கு போதையில் வந்த எனக்கு கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டேன். இதில் அவர் இறந்து போனார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News