செய்திகள்

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் அஸ்தி நாளை கரைப்பு

Published On 2016-09-27 09:14 GMT   |   Update On 2016-09-27 09:14 GMT
சசிக்குமாரின் அஸ்தி நாளை காலை 7 மணிக்கு பேரூர் அல்லது சாடி வயலில் கரைக்கப்பட உள்ளது. இதில் அவரது குடும்பத்தினரும், இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 22-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாளை சசிக்குமாரின் அஸ்தியை கரைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நாளை காலை 7 மணியளவில் மேட்டுப் பாளையத்தில் சசிக்குமாரின் அஸ்தி கரைக்கப்படுவதாக இருந்தது.

பின்னர் மாற்றப்பட்டு நாளை பேரூர் அல்லது சாடி வயலில் சசிக்குமாரின் அஸ்தியை கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:-

சசிக்குமாரின் அஸ்தி நாளை காலை 7 மணிக்கு பேரூர் அல்லது சாடி வயலில் கரைக்கப்பட உள்ளது. இதில் அவரது குடும்பத்தினரும், இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

சசிக்குமார் அஸ்தி கரைக்கப்படுவதால் இந்து முன்னணி சார்பில் நாளை பந்த் நடைபெறும் என்று வதந்திகள் பரவி வருகிறது. இது தவறான தகவல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News