செய்திகள்

மீண்டும் போட்டியிட வேலூர் மேயர் கார்த்தியாயினிக்கு வாய்ப்பு மறுப்பு

Published On 2016-09-26 10:03 GMT   |   Update On 2016-09-26 10:39 GMT
அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், மேயர் கார்த்தியாயினி பெயர் இடம் பெறவில்லை. அவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், மேயர் கார்த்தியாயினி பெயர் இடம் பெறவில்லை. அவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த முறை வரை, மாநகராட்சி மேயர் பதவி நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. மேயர் கார்த்தியாயினி வாக்காளர்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை, மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக மேயர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேயர் கார்த்தியாயினிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 3 முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுமைதாங்கி ஏழுமலை, எஸ்.ஆர்.கே.அப்பு, ராமு ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News