இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றியுடன் உலக கோப்பை தொடரை தொடங்கி உள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
பதிவு: ஜனவரி 17, 2022 05:25 IST
மாற்றம்: ஜனவரி 17, 2022 06:50 IST
19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணி
செயின்ட் கிட்ஸ்:
ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வங்கதேசம் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 35.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோசுவா பாய்டன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 96 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் களம் இறங்கிய அந்த அணி 25 புள்ளி 1 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தமது முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.