செய்திகள்
எம்எஸ் டோனி

எம்எஸ் டோனி நவம்பர் மாதம் வரை இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லையாம்....

Published On 2019-09-22 10:29 GMT   |   Update On 2019-09-22 10:29 GMT
வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலக்கு கேட்டிருந்த எம்எஸ் டோனி நவம்பர் மாதம் வரை இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக எம்எஸ் டோனி செயல்பட்டு வந்தார். இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்ததும், ராணுவத்தில் பணியாற்ற செல்ல வேண்டும் எனத் தெரிவித்த எம்எஸ் டோனி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் தன்னால் பங்கேற்க இயலாது, இரண்டு தொடரிலும் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று தேர்வுக்குழு அவருக்கு அனுமதி அளித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா தொடரில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.

இந்தியா - ஆப்பிரிக்கா இடையிலான தொடர் அக்டோபர் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் எம்எஸ் டோனி விளையாடமாட்டார் எனக்கூறப்படுகிறது.

வங்காளதேச தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து விளையாடுகிறது. அப்போதுதான் தேர்வுக்குழுவால் இவரது பெயரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே எம்எஸ் டோனிக்கு இன்னும் இடம் கொடுக்கனுமா? என்று விமர்சனம் எழும்பும் நிலையில், அவரது விடுப்பு நீண்டு கொண்டே செல்கிறது.
Tags:    

Similar News