செய்திகள்

மான்செஸ்டர் ரெஸ்டாரன்டில் கைகலப்பில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Published On 2019-06-19 10:30 GMT   |   Update On 2019-06-19 10:30 GMT
ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலர் ரெஸ்டாரன்டில் கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. இதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ஏற்கனவே ஆப்கானிஸ்தான் வீரர்கள் மான்செஸ்டர் சென்றிருந்தனர். அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மான்செஸ்டர் லிவர்பூல் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் சென்றுள்ளனர்.

அப்போது ரசிகர் ஒருவர் ஆப்கானிஸ்தான் வீரர்களை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது வீரர்களுக்கும் அவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நைப்-யிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு நைப் பதில் அளிக்கையில் ‘‘கைகலப்பு நடந்த இடத்தில் நான் இல்லை. என்னடைய பாதுகாப்பு அதிகாரியிடம் கூட நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவர்கள் பற்றியும், அவரைப் பற்றியும் எனக்கு ஏதும் தெரியாது. அணிக்கும், எனக்கும் இது மிகப்பெரிய விஷயமாக தெரியவில்லை’’ என்றார்.

ஆனால், மான்செஸ்டர் போலீசார் கைகலப்பு நடந்ததை உறுதி செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மான்செஸ்டர் லிவர்பூல் சாலையில் உள்ள அக்பருக்கு சொந்தமான ரெஸ்டாரன்டில் இருந்து இரவு 11.15 மணியளவில் போன் அழைப்பு வந்தது.

போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News