செய்திகள்

சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது - 700 பேர் பங்கேற்கும் மாநில தடகள போட்டி

Published On 2019-01-24 09:40 GMT   |   Update On 2019-01-24 09:40 GMT
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 700 பேர் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
சென்னை:

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளைஞர் தடகள போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி நாளையும் (25-ந்தேதி), நாளை மறுநாளும் (26-ந்தேதி) நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

தபிதா (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், நீளம் தாண்டுதல்), மணிராஜ், அரவிந்த் (டிரிபிள் ஜம்ப்), தீபிகா, ஜஸ்வர்யா (ஹெப்டத்லான்), செரீன், பபிஷா (நீளம் தாண்டுதல்), கிரிதரணி, சான்ட்ரா (100 மீட்டர் ஓட்டம்) போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 700 பேர் பங்கேற்கிறார்கள். 44 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியின் அடிப்படையில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 19- 21-ந்தேதி வரை நடைபெறும் 16-வது தேசிய இளைஞர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

மேலும் மார்ச் 15- 17-ந்தேதி வரை ஆங்காங்கில் நடைபெறும் ஆசிய இளைஞர் தடகள போட்டிக்கான தேர்வாகவும் இந்த போட்டி இருக்கும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News