செய்திகள்

ரன்ஏதும் எடுக்காமல் கடைசி 7 விக்கெட்டுக்களை இழந்து 35 ரன்னில் சுருண்ட மத்திய பிரதேசம்

Published On 2019-01-10 11:08 GMT   |   Update On 2019-01-10 11:08 GMT
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணி ரன்ஏதும் எடுக்காமல் கடைசி 6 விக்கெட்டுக்களை இழந்தது 35 ரன்னில் சுருண்டது. #RanjiTrophy
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா 132 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் 91 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 31 ரன்கள் முன்னிலையுடன் ஆந்திரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி கரண் ஷிண்டே (103) சதத்தால் 301 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 8.3 ஓவரில் மத்திய பிரதேசம் 19 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு பிர்லா உடன் டுபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது.

அணியின் ஸ்கோர் 35 ரன்னாக இருக்கும்போது பிர்லா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டுபே 16 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. பிர்லா ஆட்டமிழந்த பின்னர் வந்த அனைத்து வீரர்களும் டக்அவுட்டில் வெளியேறினார்கள்.

டுபே மேற்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க மத்திய பிரதேசம் 35 ரன்னில் சுருண்டது. கவுரவ் யாதவ் காயம் காரணமாக களம் இறங்கவில்லை. 16.5 ஓவரில் சுருண்ட மத்திய பிரதேசம் 23 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் 7 விக்கெட்டுக்களை இழந்தது.
Tags:    

Similar News