செய்திகள்

முதல் டி20 - அயர்லாந்து அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2018-06-27 16:43 GMT   |   Update On 2018-06-27 16:43 GMT
அயர்லாந்தில் நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. #IREvIND

அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.



அதன்பின் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ரோகித் சர்மா தொடர்ந்து நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். 



சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #IREvIND
Tags:    

Similar News