செய்திகள்

ஐபிஎல் 2018- அவேஷ் கான், மவியின் பந்து வீச்சை பார்த்து அசந்து போனேன்- ஸ்ரீகாந்த்

Published On 2018-05-03 11:21 GMT   |   Update On 2018-05-03 11:21 GMT
ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களான அவேஷ் கான், ஷிவம் மவியின் பந்து வீச்சைப் பார்த்து முன்னாள் அதிரடி மன்னன் ஸ்ரீகாந்த் அசந்து, வெகுவாக பாராட்டியுள்ளார். #IPL2018
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 லீக் தொடர் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2008-ம் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, இந்த வர்த்தகத்தை முன்னிறுத்தி தொடங்கப்பட்டது என்ற விமர்சனம் எழும்பியது. ஆனால் ஏராளமான இளம் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. இளம் வீரர்கள் ரஞ்சி டிராபி, இந்திய அணியில் இடம்பிடிக்க வழிவகுத்தது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஏராளமான இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடிய பிரித்வி ஷா, ஷுப்மான் கில், ஷிவம் மவி, நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில்  பிரித்வி ஷா, ஷுப்மான கில், ஷிவம் மவி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இதேபோல் 25 வயதிற்குபட்டு ஏராளமான இளைஞர்கள் விளையாடி வருகிறார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவேஷ் கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷிவம் மவி தங்களது வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.



இளம்வயதிலேயே சிறப்பாக பந்து வீசும் அவேஷ் கான், ஷிவம் மவி ஆகியோரை முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் சில இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவது முக்கியமான விஷயம். அவேஷ் கானின் வேகம், எதிர்பாராத பவுன்சர் பந்து, ஷிவம் மவியின் ஆக்சன் மற்றும் ரிதம் என்னை அதிக அளவில் ஈர்த்தது’’ என்றார்.
Tags:    

Similar News