செய்திகள்

முகமது அமிருக்கு விசா வழங்கியது இங்கிலாந்து - நாளை புறப்படுகிறார்

Published On 2018-04-24 09:59 GMT   |   Update On 2018-04-24 09:59 GMT
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இங்கிலாந்து விசா வழங்கியுள்ளது. இதனால் நாளை இங்கிலாந்து புறப்படுகிறார். #Amir #ENGvPAK
பாகிஸ்தான் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் அணி ஏற்கனவே இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று விட்டது.

ஆனால் விசா பிரச்சினை காரணமாக அமிர் மட்டும் செல்லவில்லை. அமிரின் மனைவி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இதனால் அமிர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்து தற்போது விசாவிற்கு அனுமதி வாங்கியுள்ளது. இதனால் அமிர் நாளை இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.

ஏப்ரல் 28-ந்தேதி பாகிஸ்தான் அணி கென்ட் அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் அமிர் கலந்து கொள்வார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

2016-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றபோது, அமிருக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News