செய்திகள்

ஹீரோ சூப்பர் கோப்பை கால்பந்து: பெங்களூரு அணி சாம்பியன்

Published On 2018-04-20 14:42 GMT   |   Update On 2018-04-20 14:42 GMT
10 பேருடன் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணியை 4-1 என வீழ்த்தி ஹீரோ சூப்பர் கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு அணி. #SuperCup #BengaluruFC
20 அணிகள் பங்கேற்ற ஹீரோ சூப்பர் கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் ஏ குரோமா முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடியாக பெங்களூரு அணியின் ஆர் பேகே 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்து. முதல் பாதி நேரத்தின் கடைசி நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் எஸ் மாலிக் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.

இதனால் 2-வது பாதி நேரத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 10 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பெங்களூரு அணி பயன்படுத்தி கோல் மழை பொழிந்தது.

ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் செத்ரி கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் என் பெடோர் ஒரு கோல் அடிக்க பெங்களூரு 3-1 என முன்னிலைப் பெற்றது. 90-வது நிமிடத்தில் சுனில் செத்ரி மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
Tags:    

Similar News