செய்திகள்

ஆண்டிகுவா- பார்புடா, கயானா, செயின்ட் லூசியாவில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்

Published On 2018-01-23 10:06 GMT   |   Update On 2018-01-23 10:06 GMT
வெஸ்ட் இண்டீஸ் ஆண்டிகுவா - பார்புடா, கயானா, செயினிட் லூசியாவில் பெண்கள் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. #ICCWT20WC #WT20WC
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிசியின் பெண்கள் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸில் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது.

அதன்படி இந்த வருடம் நவம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸில் பெண்கள் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. எந்தெந்த மைதானங்களில் ஆட்டம் நடைபெறும் என்பதை ஐசிசி இன்று தெரிவித்துள்ளது. ஆண்டிகுவா- பார்புடா, கயானா, செயின்ட் லூசியா ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடக்க சுற்று ஆட்டங்கள் கயானா தேசிய மைதானம், செயின்ட் லூசியானாவில் உள்ள டேரன் சமி மைதானத்தில் நடக்கிறது. ஆண்டிகுவா - பார்புடா சர் விவியன் ரிச்சட்ர்ஸ் மைதானத்தில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2007-ம் ஆண்டு ஆண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும்,  2010-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரையும் நடத்தியுள்ளது.  #ICCWT20WC #WT20WC
Tags:    

Similar News