செய்திகள்

இலங்கை டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக லக்மல் நியமனம்

Published On 2018-01-13 14:20 GMT   |   Update On 2018-01-13 14:20 GMT
இலங்கை டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் லக்மல் நியமிக்கப்பட்டுள்ளார். #BANvSL #lakmal
இலங்கை அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்மல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சு குழுவில் துஷ்மந்தா சமீரா உடன் 20 வயதான லஹிரு குமாராவும் இடம்பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சில் முதன்முறையாக அகிலா தனஞ்ஜெயா சேர்க்கப்பட்டுள்ளார்.



இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தினேஷ் சண்டிமல் (கேப்டன்), 2. சுரங்கா லக்மல் (துணைக் கேப்டன்). 3. டிமுத் கருணாரத்னே, 4. மேத்யூஸ், 5. தனுஷ்கா குணதிலகா, 6. குசால் மெண்டிஸ், 7. தனஞ்ஜெயா டி சில்வா, 8. நிரோஷன் டிக்வெல்லா (துணைக் கேப்டன்), 9. ரோஷன் சில்வா, 10. ரங்கணா ஹெராத், 11. தில்ருவான் பெரேரா, 12. துஷ்மந்தா சமீரா, 13 லக்சன் சண்டகன், 14. அகிலா தனஞ்ஜெயா, 15. லஹிரு காமகே, 16. ரஹிரு குமாரா.

வங்காள தேசம் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 31-ந்தேதி சிட்டகாங்கிலும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 8-ந்தேதி மிர்புரிலும் நடக்கிறது. #BANvSL #lakmal
Tags:    

Similar News