செய்திகள்

ஜடேஜா பந்து வீச்சு, ஆல்ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு

Published On 2017-11-14 11:53 GMT   |   Update On 2017-11-14 11:54 GMT
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலியா தொடரின்போது சிறந்த வகையில் பந்து வீசியதால் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார். பின்னர், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது ஆண்டர்சன் 12 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். இலங்கைக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.



அதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி வங்காள தேச ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜாவை விட 8 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளார் சாஹிப். இலங்கை தொடரில் ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்தால் ஜடேஜா மீண்டும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 6-வது இடத்தில் உள்ளார். இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் முதல் ஐந்து இடத்திற்குள் கோலி முன்னேற வாய்ப்புள்ளது. லோகேஷ் ராகுல் 8-வது இடத்திலும், ரகானே 9-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் சிறந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.



பந்து வீச்சில் ஜடேஜாவைத் தவிர அஸ்வின் மட்டுமே (4) முதல் 10 இடத்திற்குள் உள்ளார். மொகமது ஷமி 19-வது இடத்திலும், உமேஷ் யாதவ் 27-வது இடத்திலும், இசாந்த் ஷர்மா 29 இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News