செய்திகள்

60 ரன் போதாது: 160 ரன்கள் அடிக்க வேண்டும்; இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ்

Published On 2017-11-12 12:30 GMT   |   Update On 2017-11-12 12:30 GMT
ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் அதிகபட்சமாக 63 ரன்கள் அடித்துள்ளனர். அதுபோதாது, 160 ரன்கள் தேவை என பெய்லிஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இதில் முதல் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. முதல் ஆட்டம் டிராவில் முடிந்துள்ள நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் எந்த வீரரும் 63 ரன்களை தாண்டவில்லை.



இந்நிலையில் ஆஷஸ் தொடரை கைப்பற்ற வேண்டுமென்றால், 60 ரன்கள் போதாது, அதற்குப் பதிலாக 160 ரன்கள் தேவை என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News