செய்திகள்

புரோ கபடி: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு உத்தரபிரதேச அணி தகுதி

Published On 2017-10-16 03:41 GMT   |   Update On 2017-10-16 03:41 GMT
புரோ கபடி லீக் போட்டியில் உத்தரபிரதேச யோத்தா (8 வெற்றியுடன் 60 புள்ளி) ‘பி’ பிரிவில் 3-வது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது.
புனே :

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனே நகரில் நடந்த லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவையும், புனேரி பால்டன் அணி 34-41 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியையும் வீழ்த்தியது.

தோல்வியை தழுவினாலும் உத்தரபிரதேச யோத்தா (8 வெற்றியுடன் 60 புள்ளி) ‘பி’ பிரிவில் 3-வது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது.

ஏற்கனவே இந்த பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகளும், ‘ஏ’ பிரிவில் குஜராத், அரியானா, புனேரி பால்டன் அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
Tags:    

Similar News